இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Tuesday 27 December 2011

மதனப் பெண் 35 - மகிழ்ச்சி மெல்ல எட்டிப் பார்த்தது

வித்ரா மறைந்த பிறகு கண்ணனின் வீடு ஏற்கனவே களையிழந்து இருந்தது.   இப்போது ரோஹிணியை கொடைக்கானல் ஹாஸ்டல் பள்ளியில் சேர்த்த பிறகு, வீடு இன்னும் பொசுக்கென்றானது. என்ன செய்வது? இதெல்லாம் கால தேவனின் திருவிளையாடல்கள். மனிதன் மேற்கொண்டு சிறப்பாக வாழ்வதற்காக தனக்கு தெரிந்தவரை எடுக்கும் முடிவுகள், அதற்கான முயற்சிகள். வாழ்க்கையில் வாழ்ந்தாக வேண்டுமல்லவா?

ஒரு குடும்பம், அதன் வளர்ச்சி, தொடர்ச்சி என்பது தினமும் முனைந்து பாடுபட்டு மிகுந்த முயற்சியால் கட்டிய கூடு. அது திடீரென கலைந்து விட்டால், மீண்டும் அதை உருவாக்கி வைப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. அப்போது எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி கொண்டு செல்வது, என்ன விளைவுகள் ஏற்படும், இன்னும் இது போன்ற பல்வேறு காரணிகளை சிந்திக்க வேண்டியுள்ளது.

அவ்வாறு கலைந்து போன வாழ்வை கண்ணன் தனக்கு தெரிந்தவரை சீர் செய்து கொள்ள எடுத்த முதல் முடிவு, ரோஹினியின் கல்வி வாழ்வு சிறக்க வேண்டும்; அதற்கு அவளை தற்போதுள்ள சூழலில் ஹாஸ்டல் பள்ளியில் சேர்ப்பது. பெற்ற தாய் இல்லை; ஆனால் தாயாய் நின்று அன்புடனும், நேசத்துடனும் கல்வி கற்பிக்க தாயுள்ளம் படைத்த தாய்களும், சகோதரிகளும் நிறைந்த கிறுத்துவ பள்ளியில் ரோஹினிக்கு  கல்வி வாழ்க்கை கிடைத்தது.  அறை நண்பர்களுடன் அவள் மகிழ்ச்சியாக தனது கல்விப் பயணத்தை தொடங்கினால்; தொடர்ந்தாள்.

மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை பெற்றோர்கள் வருகை தினம். கண்ணன் வெள்ளிக்கிழமை மதியமே மதுரையிலிருந்து கொடைக்கானல் புறப்பட்டு சென்று விடுவார். இவ்வாறு மாதத்தில் இருமுறை சென்று வருவதால் கொடைக்கானலில் நாயுடுபுரத்தில் உள்ள விடுதி ஒன்றை, தான் வழக்கமாக தங்கும் இடமாக்கிக் கொண்டார், கண்ணன். அவரது வருகை அறிந்து அவருக்காக அறை காத்திருக்கும். அவ்வப்போது வரலஷ்மி, சத்தியதேவ் ஆகியோரை அழைத்து வரவும் கண்ணன் தவறுவதில்லை.

வெள்ளிக்கிழமை இரவு கொடைக்கானல் வந்தடையும் கண்ணன்,  விடுதியில் தங்கி மறுநாள் சனிக்கிழமை காலை பள்ளிக்கு சென்று ரோஹிணியை பார்ப்பார். அச்சமயத்தில் மற்றெல்லா பெற்றோர்களும் வந்திருப்பர். பள்ளி வளாகத்தில் எங்கு நோக்கிலும் பிள்ளைகளின்  ஆரவாரத்துடன் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அவர்களுடன் பெற்றோர்களும் சிறுபிள்ளைகள் ஆகி விடுவர்.

தனது தந்தையின் வருகைக்காக ரோஹினி நன்றாக உடுத்திக் கொண்டு, ஒரு குட்டி தேவதையாக கையில் ஒரு ரோஜாப் பூவுடன் காத்திருப்பாள். கண்ணன் வந்ததும், "ஹய்யா... டாடி.." என்று ஓடி வந்து அன்பாக கண்ணனை கட்டிக்கொண்டு இரண்டு கன்னங்களிலும் செல்லமாக முத்தமிடுவாள். பிறகு அவளை அனுமதியுடன் வெளியில் அழைத்துச் சென்று, பல இடங்களை சுற்றிக் கட்டுவார்.  போட்டிங், ரெஸ்டாரென்ட், பூங்கா, விளையாட்டு என ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியாக போகும். குளிரான இடம், பனி மூட்டம், பசுமை வாசம், புதிய மனிதர்கள் தொடர்பு என இந்த மாற்றம் கண்ணனுக்கும் இதம் தந்தது. படிப்பில் சுட்டியான ரோஹிணி தனது பாடங்கள், சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பற்றி கண்ணனிடம் நிறைய சளைக்காமல் பேசுவாள். புல்வெளியில் அமர்ந்துகொண்டு அவற்றையெல்லாம் ரசித்து கண்ணன் கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு இரண்டு தினங்கள் போவதே தெரியாது. ஞாயிற்றுக் கிழமை பிரியும் போது மட்டும் ரோஹினியின் முகம் வாட்டமடையும். கொஞ்சம் ஹோம் மேட் சாக்லேட்ஸ். சில முத்தங்கள்.  மீண்டும் வருவதாக சமாதானம். பிறகு விடை பெறல். இது வழக்கமான நிகழ்வானது.

மதுரையில் மகன் சத்தியதேவ் யு.கே.ஜி. படித்து வந்தான். பள்ளிக்கு 'ஸ்கூல் வேனில்' சென்று திரும்பி வந்தான். அவனுடன் வொர்க்ஷீட், டிராயிங், கிளே வொர்க், ஹோம் வொர்க் என வரலக்ஷ்மியும் பொழுது போக்கினார்.  பவித்ராவின் இறப்பிற்கு பிறகு, தற்போது  எல்லாம் ஓரளவு 'செட் ரைட்' ஆனதாக கண்ணன் நம்பினார்; தனது தொழில், மதுரை-கொடைக்கானல் டிரிப், குழந்தைகள் என பிசியானார்.

ரோஹிணிக்கு அரையாண்டு தேர்வு முடிந்து கிறிஸ்துமஸ் விடுமறை விடப்பட்டது. பள்ளியில் அதன் தாளாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின வாழ்த்துகளை கூறிவிட்டு, அவளை கண்ணன் மதுரைக்கு அழைத்து வந்தார். கண்ணனுக்கும் நீதிமன்றம் விடுமுறை. எனவே கண்ணன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்தார்.

மாலை நேரங்களில் குழந்தைகளை தனது பைக்கில் வைத்துக் கொண்டு ஊர் சுற்றினார். சித்தப்பா, சிறிய மாமா என உறவினர்கள் வீட்டுக்கு சென்றார்; அளவளாவினார். பேச்சின் ஊடே பவித்ராவை நினைவு கூர்ந்து அவளது பேச்சை எடுக்காமல், குழந்தைகள், அவர்களது எதிர்காலம் பற்றி கண்ணன் தொடர்ந்து உரையாடியதைக் கேட்டு எல்லோரும் சற்று நிம்மதி; அமைதி !


கண்ணனின் குடும்பத்தில் மெல்ல மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. 

தான் தனியாக சட்டத் தொழிலில் நன்கு காலூன்றி விட்டாலும், தனது தொழில் வளர்ச்சிக்கு காரணமாக, அடித்தளமாக இருந்த மூத்த வழக்குரைஞரை கண்ணன் அவ்வப்போது சென்று சந்திக்கத் தவறுவதில்லை. கண்ணன் ஆரம்பத்திலிருந்தே தனது சீனியருக்கு மிகவும் கட்டுப்பட்டவர். அவரது எந்த பேச்சையும் தட்டமாட்டார்.  அவர் கண்ணனுக்கு ஏற்பட்ட சோதனைகளின் போது நிறைய ஆறுதல் வார்த்தைகள் கூறி, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை நன்கு உணர்த்தியவர். பிள்ளைகளுக்காக வாழ வேண்டிய சூழலை சுட்டிக் காட்டியவர். மனதிற்கு வலு சேர்த்தவர்.

கண்ணனின் சீனியர் மிகுந்த இரக்க சுபாவம் கொண்டவர், இல்லாதோருக்கு வள்ளல், சட்டத் தொழிலுக்கு  ஓர்  சுடர் விளக்கு. மிகச் சிறந்த மனிதர்.  மதுரை கண்ட சொக்கத் தங்கம் ! நீதிமன்றத்தில் சிங்கம். ஆனால் வீட்டில் தனது மனைவியின் அன்புக்கு பரம அடிமை. மனையின் பேச்சு எதுவானாலும் அதற்கு 'நோ அப்ஜெக்சன்'.

இந்த முறை தனது இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சீனியரை சென்று பார்த்தார் கண்ணன்.

இந்தக் கதையில் கண்ணனின் சீனியர் கதாபத்திரம் மிக முக்கியமானது. போகப் போகத் தெரியும் ! 

(தொடரும்...)

20 comments:

Unknown said...

கதையில் சுபிட்சம் திரும்பியது மகிழ்ச்சி!

இராஜராஜேஸ்வரி said...

வீடு இன்னும் பொசுக்கென்றானது. என்ன செய்வது? இதெல்லாம் கால தேவனின் திருவிளையாடல்கள். மனிதன் மேற்கொண்டு சிறப்பாக வாழ்வதற்காக தனக்கு தெரிந்தவரை எடுக்கும் முடிவுகள், அதற்கான முயற்சிகள். வாழ்க்கையில் வாழ்ந்தாக வேண்டுமல்லவா?/

வாழ்க்கையில் வாழ்ந்தாக வேண்டும்..
கால தேவனின் திருவிளையாடல்கள்

இராஜராஜேஸ்வரி said...

பெற்ற தாய் இல்லை; ஆனால் தாயாய் நின்று அன்புடனும், நேசத்துடனும் கல்வி கற்பிக்க தாயுள்ளம் படைத்த தாய்களும், சகோதரிகளும் நிறைந்த கிறுத்துவ பள்ளியில் ரோஹினிக்கு கல்வி வாழ்க்கை கிடைத்தது. அறை நண்பர்களுடன் அவள் மகிழ்ச்சியாக தனது கல்விப் பயணத்தை தொடங்கினால்; தொடர்ந்தாள்.//

Good.. Happy..

இராஜராஜேஸ்வரி said...

குளிரான இடம், பனி மூட்டம், பசுமை வாசம், புதிய மனிதர்கள் தொடர்பு என இந்த மாற்றம் கண்ணனுக்கும் இதம் தந்தது..

sooo.. nice..

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி
//கதையில் சுபிட்சம் திரும்பியது மகிழ்ச்சி!//

எனக்கும் மகிழ்ச்சி..மறுமொழிக்கு நன்றி..

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி

//வாழ்க்கையில் வாழ்ந்தாக வேண்டும்..
கால தேவனின் திருவிளையாடல்கள்//

உண்மை..

இராஜராஜேஸ்வரி said...

இந்தக் கதையில் கண்ணனின் சீனியர் கதாபத்திரம் மிக முக்கியமானது. போகப் போகத் தெரியும் ! /

மகிழ்ச்சி மெல்ல சிறப்பாக எட்டிப் பார்க்கிறது ....

Thank God.

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி

//Good.. Happy..//

மறுமொழிகளுக்கு மகிழ்ச்சி..

இராஜராஜேஸ்வரி said...

கண்ணனின் சீனியர் மிகுந்த இரக்க சுபாவம் கொண்டவர், இல்லாதோருக்கு வள்ளல், சட்டத் தொழிலுக்கு ஓர் சுடர் விளக்கு. மிகச் சிறந்த மனிதர். மதுரை கண்ட சொக்கத் தங்கம் ! நீதிமன்றத்தில் சிங்கம். ஆனால் வீட்டில் தனது மனைவியின் அன்புக்கு பரம அடிமை. மனையின் பேச்சு எதுவானாலும் அதற்கு 'நோ அப்ஜெக்சன்'./


Nice .. சொக்கத் தங்கம் !

Advocate P.R.Jayarajan said...

//மகிழ்ச்சி மெல்ல சிறப்பாக எட்டிப் பார்க்கிறது ....
Thank God.//

மகிழ்ச்சிக்கு வித்திட ஆள் வர வேண்டுமே..

Advocate P.R.Jayarajan said...

//Nice .. சொக்கத் தங்கம் !//

Yes.. pure gold..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

குழந்தை ரோஹினியை கையில் ரோஜாவுடன் படத்தில் காட்டியுள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மிகச் சிறப்பான படத்தை செலெக்‌ட் செய்துள்ளீர்கள். சபாஷ்!

/மகிழ்ச்சி மெல்ல எட்டிப்பார்த்தது/ தலைப்பு மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது.

//கண்ணன் வந்ததும், "ஹய்யா... டாடி.." என்று ஓடி வந்து அன்பாக கண்ணனை கட்டிக்கொண்டு இரண்டு கன்னங்களிலும் செல்லமாக முத்தமிடுவாள். //

குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி தரும் சூழல் தான், இது.

அருமை. வெகு அருமை. பொருத்தமாகவே காட்டியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

நிறைய இடங்கள் நிறைவைத்தந்தன.
தொடருங்கள். மிகுந்த ஆவல்+எதிர்பார்ப்புடன்....vgk

தமிழ்மணம்: 3
யூடான்ஸ்: 3
இண்ட்லி: 2

Advocate P.R.Jayarajan said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
//குழந்தை ரோஹினியை கையில் ரோஜாவுடன் படத்தில் காட்டியுள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மிகச் சிறப்பான படத்தை செலெக்‌ட் செய்துள்ளீர்கள். சபாஷ்!//

நன்றி ... ஆனால் மிகப் பொருத்தமான படத்தை தேட நிறைய நேரம் ஆகி விட்டது..

/மகிழ்ச்சி மெல்ல எட்டிப்பார்த்தது/ தலைப்பு மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது

மகிழ்ச்சி வேணும் வாழ்வில்..!

Advocate P.R.Jayarajan said...

@ வை.கோபாலகிருஷ்ணன்

//குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி தரும் சூழல் தான், இது. அருமை. வெகு அருமை. பொருத்தமாகவே காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.//

ஹாஸ்டலில் தங்கி படிக்கும் இது போன்ற சிறிய பிள்ளைகளை பெற்றோர்கள் பார்க்க வரும் போது இரு தரப்பு உள்ளங்களிலும் தோன்றும் மகிழ்ச்சி உணர்வுகள் இருக்கின்றதே, அவற்றை விவரிப்பது கடினம். நன்றி

Advocate P.R.Jayarajan said...

@ வை.கோபாலகிருஷ்ணன்

//நிறைய இடங்கள் நிறைவைத்தந்தன.
தொடருங்கள். மிகுந்த ஆவல்+எதிர்பார்ப்புடன்....vgk//

தொடர்கின்றேன் தங்கள் வாழ்த்துகளுடன்...
தங்கள் கருத்தாழம் மிக்க மறுமொழிகளுக்கும்
ஓட்டளித்தமைக்கும் நன்றி.

M.R said...

ஆஹா தொடர் பதிவு ,முழுதும் படித்து வருகிறேன் நண்பரே

த.ம 4

Advocate P.R.Jayarajan said...

@ M.R
மறுமொழிக்கும்
ஓட்டளித்தமைக்கும் நன்றி.

rajamelaiyur said...

அருமையான கதை .. தொடரட்டும்

rajamelaiyur said...

நண்பர்களே உங்களுக்காக :

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...