இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Sunday, 15 January 2012

மதனப் பெண் 37 - வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்

புத்தாண்டு மகிழ்ச்சியாக பிறந்தது. கண்ணன், ரோஹினி, சத்தியதேவ் எல்லோரும் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். வரலக்ஷ்மிக்கு சந்தோசம்.

விடுமுறை முடிந்து கண்ணனுக்கு நீதிமன்றம் திறந்து விட்டது. ரோஹிணிக்கும் பள்ளி திறந்து விட்டது. எனவே அவளை பள்ளியில் கொண்டு சென்று விட கண்ணன் தயாரானார். ரோஹிணிக்கு பிரிய மனமில்லை.

"பொங்கல் லீவில் வரலாம்.. ஒரு வாரம் லீவ் கிடைக்கும்" என்று வரலக்ஷ்மி சமாதானம் சொல்லிய பிறகு ரோஹினி பள்ளிக்கு கிளம்பினாள். கண்ணன் அவளை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் புறப்பட்டார்.

வழக்கம் போல் பயணம், பள்ளி, ரோஹிணியிடம் விடை  பெறல், மீண்டும் மதுரை நோக்கி பயணம்.

மதுரை வந்த பிறகு கண்ணன் தனது நீதிமன்றப் பணிகளில் மூழ்கினார். அதே நேரம் பொங்கல் பண்டிகை முடிந்து 21-ஆம் தேதி வரவிருக்கும் பவித்ராவின் வருஷ திதிக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் கவனித்தார். புரோஹிதம் செய்ய தெற்கு வாசல் ஐயரைப் போய்ப் பார்த்தார். அவர், "வக்கீல் சார்.. உங்க ஆத்துக்காரி ஆக்சிடேன்ட்லே திடீரென்னு போயிட்டா...அகால மரணம்.. இயற்கையா செத்துபோனவாளுக்குதான் நிறைய சாஸ்திர சம்பிரதாயம் பண்ணனும்ன்னு கருட புராணம் சொல்லுது.. ஆனா அவா இப்படி திடீர் மரணம் அடைச்சதாலே, அவா நம்மோடுதான் இருக்கிறதாதான் அர்த்தம். அதனாலே அதுக்கு தக்க மாதிரி புரோஹிதம் செய்யனும்.. அதே நான் பாத்துகிறேன்... மகளை ஹாஸ்டலே இருந்து அழைச்சிட்டு வந்திடுங்க... சில சாமான்கள் தேவை.. அதுக்கு ஒரு லிஸ்ட் மட்டும் தாரேன்.. அதை வாங்கி பிரிபேர் பண்ணி வச்சிக்கோங்க." என்று ஐயர் விளக்கம் சொன்னார். அவர் கொடுத்த லிஸ்டை வாங்கி வைத்துக் கொண்டார்.

பவித்ராவின் வருஷ திதி வரும் விஷயத்தை தனது மாமன்மார்கள், சித்தப்பாமார்கள், தனது  மூத்த வழக்குரைஞர்கள் உட்பட தனது நண்பர்கள் அனைவரிடம் சொல்லி அன்றைய தினம் அனைவரையும் தனது வீடு வரும்படி அழைப்பு விடுத்தார்.

பத்து தினங்கள் பறந்து விட்டன. தொடர்ந்து பொங்கல் விடுமுறைக் காக ரோஹிணியை அழைத்து வர கண்ணன் கொடைக்கானல் கிளம்பினார். அப்பா எப்போது வந்து தன்னை அழைத்துப் போவார் என்று தனது பெட்டியு டன் காத்திருந்தாள் ரோஹினி. பள்ளி வந்தடைந்த கண்ணனை பார்த்ததும் ரோஹினியின் முகத்தில் உற்சாக வெள்ளம்; மகிழ்ச்சி. விடுதியை விட்டு ஓடோடி வந்து கண்ணனை கட்டிப் பிடித்துக் கொண்டாள். 'டாடி.. மை ஸ்வீட் டாடி... லவ்லி டாடி.. " என்று செல்லம் கொஞ்சினாள். கண்ணனும் ரோஹிணியை வாரியணைத்துக் கொண்டார். இருவரும் அப்படியே பள்ளியில் உள்ள பூங்காவைக் கடந்து வெளி வந்தனர்.

அப்போது ரோஹிணியை போல மற்ற பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்திருந்த அவர்களது தாய் தந்தையர் அந்தப் பூங்காவில், தங்கள் பிள்ளைகளுடன் குதூகலமாக இருப்பதையும், விளையாடுவதையும் ரோஹினி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் திடீரென சுருங்கியது.

"டாடி... அங்கே பாருங்க.... என் கிளாஸ் மேட் பூஜாவோட மம்மி பூஜாவோட எவ்வளவு ஹேப்பியா விளையாடுறாங்க பாருங்க.." என்று அந்தப் பூங்காவில் ஓரிடத்தைக் காட்டினாள், ரோஹினி.


தொடர்ந்து, "ஏன் டாடி ...  எனக்கும் ஒரு மம்மி இருந்த எவ்வளவு நல்ல இருக்கும்..?" என்று கேட்டாள் ரோஹினி..

கண்ணனுக்கு என்ன பதில் சொல்வது என்று சட்டென விளங்கவில்லை.

வாழ்க்கை சட்டென விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்..! வாழ வாழத்தான் புரியும்.... !!

(பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.. )

17 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

Advocate P.R.Jayarajan said...

நன்றி...
உங்களுக்கும் வாழ்த்துகள்..

ரமேஷ் வெங்கடபதி said...

நல்ல திருப்பங்கள் அமைய காத்திருப்போம்!

இராஜராஜேஸ்வரி said...

வாழ்க்கை சட்டென விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்..! வாழ வாழத்தான் புரியும்.... !!/

அனுபவ வரிகள். அருமை..

வாழ்ந்து பார்த்தால் தானே வாழ்க்கை புரியும்..

இராஜராஜேஸ்வரி said...

கண்ணனுக்கு என்ன பதில் சொல்வது என்று சட்டென விளங்கவில்லை.


எல்லோரையும் யோசிக்கத்தான் வைக்கும் ...

சட்டென பதில் சொல்லத்தெரியாத தந்தை எதிர்பார்க்காத கேள்வி!

இராஜராஜேஸ்வரி said...

அவா இப்படி திடீர் மரணம் அடைச்சதாலே, அவா நம்மோடுதான் இருக்கிறதாதான் அர்த்தம். //

கலங்கவைக்கும் அர்த்தம்தான்..

குடும்பத்தோடு ஆத்மாவாக கலந்திருந்து நல்மாய் காக்கட்டும்..

இராஜராஜேஸ்வரி said...

இனிய பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி
//நல்ல திருப்பங்கள் அமைய காத்திருப்போம்!//

பல்வேறு திருப்பங்கள் கண்டிப்பாக உண்டு.
அவை நல்லவையா, கெட்டவையா என்பதுதான் தெரியவில்லை.
கருத்துரைக்கு நன்றி சார்.

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி
//கண்ணனுக்கு என்ன பதில் சொல்வது என்று சட்டென விளங்கவில்லை.//

கண்ணன் நினைத்து கூட பார்க்கவில்லை..

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி
//அவா இப்படி திடீர் மரணம் அடைச்சதாலே, அவா நம்மோடுதான் இருக்கிறதாதான் அர்த்தம். //
கலங்கவைக்கும் அர்த்தம்தான்..//

கண்ணனும் அப்படியே நம்புகிறார்..

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி
//இனிய பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..//

தேனினும் இனிய தங்கள் கருத்துரைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
எங்கள் பொங்கல் நல் வாழ்த்துகளை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்

இராஜராஜேஸ்வரி said...

இண்ட்லியில் இணைத்திருக்கிறேன்..

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் ஐயா...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_5.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

கவியாழி கண்ணதாசன் said...

"ஏன் டாடி ... எனக்கும் ஒரு மம்மி இருந்த எவ்வளவு நல்ல இருக்கும்..?" என்று கேட்டாள் //
சின்ன குழந்தையின் ஏக்கம் வருத்தமாய் உள்ளது.

Advocate P.R.Jayarajan said...

கவியாழி கண்ணதாசன் said...
//சின்ன குழந்தையின் ஏக்கம் வருத்தமாய் உள்ளது.//

சின்ன குழந்தையின் ஏக்கத்தைப் போக்க கண்ணன் செய்த வேலை அவரை சிக்கலில் மாட்டி வைத்து விட்டது. அருமையான கதையை தொடர முடியாமல் தடை ஏற்பட்டு விட்டது.

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!

என் வலைக்கு வருகைதந்து கருத்தளித்தமைக்கு
மிக்க நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...