இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Friday 23 December 2011

மதனப் பெண் 32 - மாமா என்ன சொல்லப் போனார்? மாப்பிள்ளை என்ன சொல்ல வந்தார்?

படுக்கையில் சுவாதீனமில்லாமல் அம்மா படுத்திருக்கும் காட்சி கண்ணனை மிகவும் வேதனைப்படுத்தியது. சந்தோசமாக  வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண்மணி. இளம் வயதில் வெள்ளை சீலையுடுத்தி,  திருநீரை நெற்றியில் பூசிக் கொள்ளும் வரம் வாங்கிய அபாக்கியவதி. தனது மகன் நன்கு படித்து முன்னேற தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சிறந்த தாய். நல்லதொரு பெண்ணை கட்டி வைத்து மகிழ்ச்சியாக வாழ்வதை அழகு பார்க்க வேண்டும் எனக் கனாக் கண்ட ஒரு சாதாரண ஆசாபாசமுள்ள உள்ளம். ஆனால் தோப்பாக வாழ வேண்டிய அவன் தன்னை போலவே தனி மரமாகி விடுவான் என்று அத்தாய் சற்றும் நினைக்கவில்லை. அந்த வேதனை அவரது இதயம் முழுவதும்  வியாபித்து பரவி இருந்தது. அதன் வெளிப்பாடு இன்று அவருக்கு நெஞ்சில் மரண வலி. அடுத்து வந்த இரண்டு தினங்களில் வரலக்ஷ்மிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. வலி வந்தால்தான் நமது உடலில் இதயம் என்ற உறுப்பு இருப்பதை அறிவோம் என்று சொல்வார்கள். அந்த இதயம் சீராக செயல்பட, ரத்த ஓட்டம் தடைபடாமல் செல்ல மருத்துவர் மாத்திரை, மருத்துகளை எழுதிக் கொடுத்தார். வரலக்ஷ்மி வலியிலிருந்து மெல்ல மீண்டு இயல்பான நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  சேதி அறிந்து அனைத்து உறவினர்களும் வரலக்ஷ்மியை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.

முன்னதாக கோவையில் இருந்து கண்ணனின் மாமா சுந்தரம், மாமி சர்மிளா ஆகியோரும்  மருத்துவமனைக்கு வந்து  வரலக்ஷ்மியை கவனித்துக் கொண்டனர். விடுமுறைக்காக அழைத்து சென்றிருந்த பேரக்குழந்தைகளையும் சுந்தரம் கையுடன் அழைத்து வந்திருந்தார். ஒருபுறம் தனது மகளின் அகால மறைவால் மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம், இழப்பு. மற்றொரு புறம் தனது பாசமான தங்கை வரலக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்தான உடல் வேதனை. பேரப் பிள்ளைகளின் 'எடுப்பார் கைப்பிள்ளை' நிலை. இவை யாவும் சுந்தரத்தை ஏதோ செய்தது. மனதை வாட்டியது. தலையில் கையை வைத்தவாறு சற்று நேரம் அமர்ந்து கொண்டார். வீட்டுக்கு பெரியவரான தான் ஏதாவது ஒரு நல்ல தீர்வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

சில மருத்துவ அறிவுரைகளுடன் வரலக்ஷ்மியை மருத்துவர் டிஸ்சார்ஜ் செய்தார். சுந்தரமும், சர்மிளாவும் 4  நாட்கள் தங்கியிருந்து ஒத்தாசை செய்தனர். சர்மிளா சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டார்.

சுந்தரம் தனது மகள் பவித்ராவின் பெரிய மாலை போட்ட படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். சுந்தரம் தனது அலுவலகப் பணியில் ஆகட்டும் சரி.. வாழ்வில் ஆகட்டும் சரி.. ஒரு ப்ராக்டிகலான மனிதர். சூழலுக்கு எது தேவை, எது சாத்தியம் என்பதை விரைவில் முடிவு எடுப்பவர். ஆனால் அவ்வாறு தான் இப்போது எடுத்திருக்கும் முடிவை எப்படி தான் மனைவி சர்மிளாவிடம் சொல்வது என்பதை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன் மாப்பிள்ளை கண்ணனிடம் சொல்லி விடலாம் என்று நினைத்து அவரது அலுவலக அறைக்கு சென்றார்.

"வாங்க மாமா.. நிறைய வொர்க் பெண்டிங் ஆயிடிச்சு. அதை கொஞ்சம் சார்ட் அவுட் செய்துகிட்டே இருக்கேன்.. நீங்களும், மாமியும் வந்து அம்மாவை கவனிசிகிட்டதுக்கு ரொம்ப  சந்தோசம். அம்மாவாலே முடியலே.. பாவம்.." என்று கண்ணன் பேசினார். தொடர்ந்து அவரே, "குழந்தைகளோட பியுச்சர் நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா.. அதனாலே நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் .. இது சரியா வரும் என்று நினைக்கிறேன். எதுக்கும் உங்ககிட்டே ஒரு வார்த்தை நான் சொல்லியே ஆகணும். என்ன இருந்தாலும் நீங்க என்னோட சொந்த தாய் மாமா.. அதோட பசங்களோட தாத்தா, பாட்டி. இந்த மேட்டரா மதியம் உங்ககிட்டே பேசணும்ன்னு இருந்தேன்.. நீங்களே இங்கே வந்துட்டீங்க.. நான் ஏற்கனவே உங்ககிட்டே கூட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணிருக்கேன்" என்றார்.

தான் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று மாப்பிள்ளையிடம் வந்தால், அவர் தன்னிடம் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று சொல்கிறாரே என்று சுந்தரம் சற்று திகைத்தார்.

இவர் என்ன சொல்லப் போனார்? அவர் என்ன சொல்ல வந்தார்?

(பின் சொல்கிறேன்..) 

27 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆனால் தோப்பாக வாழ வேண்டிய அவன் தன்னை போலவே தனி மரமாகி விடுவான் என்று அத்தாய் சற்றும் நினைக்கவில்லை. அந்த வேதனை அவரது இதயம் முழுவதும் வியாபித்து பரவி இருந்தது. அதன் வெளிப்பாடு இன்று அவருக்கு நெஞ்சில் மரண வலி. //

இது சாதாரண மரண வலி அல்ல. அனுபவிக்கும் முதியவர்களுக்கே அன்றாடம் தெரியும், மிகவும் பயங்கரமானதொரு மரண வலி தான்.

வயதில் பெரியவர்களாக தாங்கள் இருக்கும் போது தங்கள் கண் எதிரேயே, குடும்பத்துச் சிறியவர்களை அழைத்துக்கொண்டு போகும், தெய்வத்தின் மேலேயே கூட இவர்களுக்கு கடுங்கோபம் வரும்.

Advocate P.R.Jayarajan said...

//வயதில் பெரியவர்களாக தாங்கள் இருக்கும் போது தங்கள் கண் எதிரேயே, குடும்பத்துச் சிறியவர்களை அழைத்துக்கொண்டு போகும், தெய்வத்தின் மேலேயே கூட இவர்களுக்கு கடுங்கோபம் வரும்.//

'ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக் கொள் தாயே' என்று வணங்கியும், அத்தெய்வம் பவித்ராவை தனக்கு சொந்தமாகிக் கொண்டது..
இழப்பு ஏற்படும் போது கோபம், கோபம் வந்தால் பிரச்னை, பிரச்னை வந்தால் நோய்.. நோய் வந்தால் செலவு.. இப்படி சங்கிலித் தொடரகச் செல்லும்.. கண்ணனின் வாழ்வு எப்படி செல்லப் போகிறதோ.. ?

மறுமொழிக்கு நன்றி..

Advocate P.R.Jayarajan said...

//இது சாதாரண மரண வலி அல்ல. அனுபவிக்கும் முதியவர்களுக்கே அன்றாடம் தெரியும், மிகவும் பயங்கரமானதொரு மரண வலி தான்.//

நொடிப் பொழுதும் விடாமல் துரத்தும் மன வலி..

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுத்தி வளைத்து, தன் மகளைக் கட்டிக் கொடுத்த மாப்பிள்ளைக்கு, அவரின் குழந்தைகளின் ந்லன் கருதி, மறும்ணம் செய்து வைப்பது தான், தற்போதைய சூழ்நிலைக்கு, ஒரே ஆதரவாக இருக்கும் என்று மாமா சொல்ல வருகிறாரோ என எனக்குத் தோன்றுகிறது.

மாப்பிள்ளை தன் மாமாவிடம் சொல்ல வந்தது: தாங்களும், மாமியும் இங்கேயே எங்களுடனேயே நிரந்தரமாக பேரப்பிள்ளைகளை உத்தேசித்தும், தன் தாயாரின் உடல் நிலையை உத்தேசித்தும் தங்கி விடுங்கள், என்பதாக இருக்கலாம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

பார்ப்போம். அடுத்தப்பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

எது வேண்டுமானாலும் நடக்கலாம், தான்!

கதை விறுவிறுப்பாகவும், சோகமாகவும் செல்கிறது.

எப்படியோ நடக்கப்போவ்து யாவும் நல்லதாக நடந்தால் சரி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் அண்ணி 1977 இல் (கதையில் வரும் பவித்ரா போல) இறந்துவிட்டார்கள். 3 ஆண் குழந்தைகள் + 1 பெண் குழந்தை. கடைசிக்குழந்தைக்கு [ஆண்]ஒரே ஒரு வயது மட்டுமே. அடுத்த 18 ஆண்டுகள் என் தாயார் மிகுந்த வலியுடன் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டார்கள். என் தாயாருக்கே என் அண்ணி இறக்கும் போது 67 வயது. இந்தக் கொடுமைகளை நான் நேரில் கண்டவன். நல்லவேளையாக என் பெரிய அண்ணனுக்கு மறுமணம் ஏதும் நடத்தப்படவில்லை. அவர் சமீபத்தில் ஓராண்டுக்கு முன்பு தன் 81 ஆவது வயதில் காலமானார். நல்ல உடல்வாகு அவருக்கு. நோய் நொடி ஏதும் இல்லை. கீழே பாத்ரூமில் விழுந்தார். தலையில் அடிபட்டு ஒருவாரம் மட்டுமே ஆஸ்பத்தரியில். குழந்தைகள் எல்லோரும் இப்போது நன்கு முன்னுக்கு வந்துவிட்டார்கள். இனி கவலையில்லை தான்.

Advocate P.R.Jayarajan said...

//சுத்தி வளைத்து, தன் மகளைக் கட்டிக் கொடுத்த மாப்பிள்ளைக்கு, அவரின் குழந்தைகளின் ந்லன் கருதி, மறும்ணம் செய்து வைப்பது தான், தற்போதைய சூழ்நிலைக்கு, ஒரே ஆதரவாக இருக்கும் என்று மாமா சொல்ல வருகிறாரோ என எனக்குத் தோன்றுகிறது.//

அவர்தான் ப்ராக்டிகலான மனிதர் ஆயிற்றே...!

Advocate P.R.Jayarajan said...

//மாப்பிள்ளை தன் மாமாவிடம் சொல்ல வந்தது: தாங்களும், மாமியும் இங்கேயே எங்களுடனேயே நிரந்தரமாக பேரப்பிள்ளைகளை உத்தேசித்தும், தன் தாயாரின் உடல் நிலையை உத்தேசித்தும் தங்கி விடுங்கள், என்பதாக இருக்கலாம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.//

சஸ்பென்ஸ் ..!!

Advocate P.R.Jayarajan said...

//பார்ப்போம். அடுத்தப்பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.//

தங்கள் ஆவலுக்கு கதை காத்திருக்கிறது, விறுவிறுப்புடன்..
தொடர்கிறேன்..

Advocate P.R.Jayarajan said...

//எப்படியோ நடக்கப்போவ்து யாவும் நல்லதாக நடந்தால் சரி!//

நம்பிக்கைதான் வாழ்க்கை என்று கண்ணன் நினைக்கிறார்.

Advocate P.R.Jayarajan said...

//என் அண்ணி 1977 இல் (கதையில் வரும் பவித்ரா போல) இறந்துவிட்டார்கள். 3 ஆண் குழந்தைகள் + 1 பெண் குழந்தை. கடைசிக்குழந்தைக்கு [ஆண்]ஒரே ஒரு வயது மட்டுமே. அடுத்த 18 ஆண்டுகள் என் தாயார் மிகுந்த வலியுடன் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டார்கள். என் தாயாருக்கே என் அண்ணி இறக்கும் போது 67 வயது. இந்தக் கொடுமைகளை நான் நேரில் கண்டவன். //

மனம் மிகுந்த துயரடைந்திருக்கும்..

Advocate P.R.Jayarajan said...

//நல்லவேளையாக என் பெரிய அண்ணனுக்கு மறுமணம் ஏதும் நடத்தப்படவில்லை.//

நல்லவேளையாக பிள்ளைகள் சித்தி கொடுமையில் இருந்து தப்பித்தனர்.

Advocate P.R.Jayarajan said...

//நல்ல உடல்வாகு அவருக்கு. நோய் நொடி ஏதும் இல்லை//

மறுமணம் செய்து கொள்ளாமல் இருந்ததே அவருக்கு எல்லா வகைளிலும் நிம்மதியை, பலத்தை கொடுத்திருக்கிறது..

Advocate P.R.Jayarajan said...

//குழந்தைகள் எல்லோரும் இப்போது நன்கு முன்னுக்கு வந்துவிட்டார்கள். இனி கவலையில்லை தான்.//

வாசிப்பதற்கே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

Advocate P.R.Jayarajan said...

@ வை.கோபாலகிருஷ்ணன்

உணர்வுபூர்வமான உங்கள் இரண்டு கருத்துரைகளுக்கு மிக்க நன்றி வை.கோகி சார்..

இராஜராஜேஸ்வரி said...

அவன் தன்னை போலவே தனி மரமாகி விடுவான் என்று அத்தாய் சற்றும் நினைக்கவில்லை.

மிகவும் பாதிக்கும் கொடுமையான வலி..

தன்னைப்போல் தன் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்றுதானே பெற்ற மனம் பிரார்த்திக்கும்..

இராஜராஜேஸ்வரி said...

இவர் என்ன சொல்லப் போனார்? அவர் என்ன சொல்ல வந்தார்?

இரண்டுமே மறுமணம் பற்றியதாக இருக்குமோ!!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆர்வத்தை உண்டு பண்ணி விட்டீர்கள் சார்!
பகிர்விற்கு நன்றி! என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கும் நன்றி சார்!

திண்டுக்கல் தனபாலன் said...

த.ம. 2

இராஜராஜேஸ்வரி said...

சுந்தரம் தனது அலுவலகப் பணியில் ஆகட்டும் சரி.. வாழ்வில் ஆகட்டும் சரி.. ஒரு ப்ராக்டிகலான மனிதர். சூழலுக்கு எது தேவை, எது சாத்தியம் என்பதை விரைவில் முடிவு எடுப்பவர். /

பிராக்டிகல் முடிவுகள் அலுவலக பணியில் சரியாக வருவதைப் போல் வாழ்வில் இயலுவதில்லைதான்..

வாழ்க்கை என்பது வாய்ப்பாடு அல்லவே!
1*2 = 2
2*2 = 4
என்பது போல்

நல்லது செய்பவர்களுக்கு நல்லதும்,
கெட்டது செய்பவர்களுக்கு கெட்டதும் நடப்பதில்லை..
எல்லாம் அவன் செயல்!

இராஜராஜேஸ்வரி said...

ஒருபுறம் தனது மகளின் அகால மறைவால் மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம், இழப்பு. மற்றொரு புறம் தனது பாசமான தங்கை வரலக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்தான உடல் வேதனை. பேரப் பிள்ளைகளின் 'எடுப்பார் கைப்பிள்ளை' நிலை. இவை யாவும் சுந்தரத்தை ஏதோ செய்தது. மனதை வாட்டியது

வாசிப்பவர்கள் மனதையும் வாட்டுகிறது..
கல்லும் கரையுமோ!

Advocate P.R.Jayarajan said...

//மிகவும் பாதிக்கும் கொடுமையான வலி..
தன்னைப்போல் தன் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்றுதானே பெற்ற மனம் பிரார்த்திக்கும்..//

பெற்ற மனம் துடித்துப் போகும்..

Advocate P.R.Jayarajan said...

//இரண்டுமே மறுமணம் பற்றியதாக இருக்குமோ!!//

சொல்கிறேன்.. ஆனால் எல்லாம் அவன் செயல்..

Advocate P.R.Jayarajan said...

//நல்லது செய்பவர்களுக்கு நல்லதும்,
கெட்டது செய்பவர்களுக்கு கெட்டதும் நடப்பதில்லை..//

நன்றாகச் சொன்னீர்கள்.. பொறுமை வேண்டும்..
காத்திருந்தால் கெட்டது செய்தவர்கள் கெடுவதையும், நல்லது செய்தவர்கள் சோதனைகளில் இருந்து தப்புவதையும் கண் கூடாகப் பார்க்கலாம்.

Advocate P.R.Jayarajan said...

//வாசிப்பவர்கள் மனதையும் வாட்டுகிறது..
கல்லும் கரையுமோ!//

இனிதான் பல்வேறு பயங்கர திருப்பங்கள் நடக்க உள்ளன...

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி

கொஞ்சமும் சளைக்காமல் நான்கு மறுமொழிகளை இட்ட உங்களுக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள்.

Advocate P.R.Jayarajan said...

@ திண்டுக்கல் தனபாலன்
//ஆர்வத்தை உண்டு பண்ணி விட்டீர்கள் சார்!
பகிர்விற்கு நன்றி! என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கும் நன்றி சார்!//

மறுமொழிக்கும், ஓட்டுக்கும் நன்றி தி.த. சார்.

Advocate P.R.Jayarajan said...

@ நண்டு @நொரண்டு -ஈரோடு

நன்றி சார்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...