இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Thursday 29 December 2011

மதனப் பெண் 36 - புத்தாண்டு வருகிறது !

கண்ணனின் சீனியர் அலுவலகம் மதுரை கீழ மாரட் வீதியில் அமைந்துள்ளது. அலுவலகத்துடன் கூடிய வீடு. பெரிய கட்டடம். வெளியில் எஸ்.கே.நாக லிங்கம், வழக்கறிஞர்., என்று தடித்த எழுத்துகளில் எழுதப்பட்ட பெயர் பலகை. முன்னால் கட்சிகாரர்கள் அமர்வதற்கான அறை. அருகிலேயே ஜூனியர் வழக்குரைஞர்கள், குமாஸ்தா அமரும் அறை. உள்ளே சீனியர் நாகலிங்கத்தின் தனியறை. நீதிமன்றத்திற்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கண்ணின் சீனியர் ஓய்வாக அமர்ந்திருந்தார். அலுவலகத்தில் ஆபிஸ் பாய் தவிர வேறு யாரும் இல்லை.  கண்ணனையும் குழந்தைகளையும் பார்த்தவுடன் அவர் உற்சாகமானார்.

"வா. கண்ணா.." என்று அன்பாக வரவேற்றார். குழந்தைகளை பார்த்தவுடன் "ஹாய்... குட்டீஸ்.." என்று அரவணைத்துக் கொண்டார். இரண்டும் அவர் அருகில் அமர்ந்து கொண்டனர். அவர் சத்தியாவை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, ரோஹிணியிடம், "நான் உங்களுக்கு தாத்தா மாதிரி.. உங்க தாத்தா வேதாச்சலதோட குட் ஓல்ட் பிரண்ட்.." என்று அவர் தன்னை ஒரு மிகப் பெரிய வக்கீல் என்பதை மறந்து சிறு குழந்தையாக பிரியமாக அவர்களிடம் பேசினார்.

வாழ்வில் வள்ளல், வறியவர்களுக்கு  இலவசமாக சட்ட உதவி, தொழிலில் சிங்கம்,  மனைவிக்கு தங்கம், நீதிமன்ற வட்டாரத்தில் அவரை எல்லோரும் அவரது பெயரின் முதல் மூன்று எழுத்துகள் S.K.N .என்பதைக் கூட்டி பிரபலமாக 'ஸ்கேன்' என்று அழைப்பார்கள். வழக்கு ஆவணங்களை பரிசீலிப்பதில், அவரது பார்வையும் ஒரு 'ஸ்கேன்' தான். குறைவில்லா வருமானத்துடன் ஆண்டவன் அவருக்கு நிறைய கொடுத்திருக்கிறார். 


ஆனால் என்ன சொல்லி, என்ன செய்ய? ஆண்டு அனுபவிக்க, பெயர் சொல்ல  அவருக்கு ஒரு பிள்ளை பிறக்கவில்லை. அவரும், அவரது மனைவி கண்மணியும்  வேண்டாத தெய்வங்கள் இல்லை. போகாத கோவில்கள் இல்லை. செய்யாத தான தருமங்கள் இல்லை. ஆண்டுகள் போனதே தவிர, ஆண்டவன் கண் திறந்து பார்க்கவில்லை. முதலில் மிக்க மன வருத்தமடைந்த அவர், பின் அதை பற்றி நினைக்கவில்லை. அவர் 'டேக் இட் இசி' பாலிசியை பின்பற்றுபவர். கேட்டால், "இப்படி சில சமயங்களில் நடந்து விடுவதுண்டு.... நான் வேற ஒரு காரியத்துக்காக, என்னோட தொழிலுக்காக படைக்கப்பட்டிருக்கேன் என்று எனக்கு கடவுள் உணர்த்தியிருக்கார். அதுக்காக எனக்கு குழந்தைகள் பொறுப்பை ஆண்டவன் தரவில்லை" என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.  வயது 60  ஆகிறது. அவரது மனைவி கண்மணியை இன்றும் 'செல்லம்.. கண்ணு..' என்று தான் எல்லோர் முன்பும் அழைப்பர். இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தையாகி விட்டனர். வாரம் தவறாமல் கோவில் அல்லது உணவகம் என்று வெளியே கிளம்பி விடுவர். ஆண்டு தவறாமல் கோடை விடுமுறையில் வெளிநாட்டு சுற்றுலா. கிட்டத்தட்ட உலக நாடுகளில் பாதிக்கும் அதிகமானதை பார்த்து விட்டனர், இத்தம்பதிகள்.  எல்லா உறவினர்களிடமும் பாசமாக பழகுவதால், இவர்களது வீட்டுக்கு உறவினர்கள் வருகை அதிகம் இருக்கும்.

இப்படிப்பட்ட அவர் கண்ணனின் குழந்தைகளை பார்த்தவுடன் குதூகலமானதில் வியப்பில்லை. உடனே அருகில் உள்ள அரசன் ஸ்வீட் கடையில் இருந்து ஸ்வீட், பப்ஸ் வாங்கி வரச் சொல்லி ஆபிஸ் பையனை அனுப்பினார்.

ஸ்வீட், பப்ஸ் வந்தது. எல்லோரும் சாப்பிட்டனர். அப்போது... "சொல்லு கண்ணா.. எப்படி இருக்கே..? அம்மா எப்படி இருக்காங்க.? மக கொடைக்கானல் ஸ்கூல்லே எப்படி படிக்கிறா? ஹொவ் இஸ் கோயிங் லைப் ?" என்று சில கேள்விகளை கேட்டார். "எல்லாம் ஓரளவு சரி பண்ணிக்கிட்டு இருக்கேன்.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்.. ஆனா என்னதான் நான் எனக்குநானே சமாதானம் பண்ணிக்கிட்டாலும் அவளை என்னலே மறக்க முடியலை.." என்று கண்ணன் சற்று சுருதி குறைந்த குரலில் சொன்னார்.

"கண்ணா.. போனதை நினைச்சு வருத்தப்பட்டா உன் மனசு, உடம்பு ரெண்டும் கெட்டுப் போகும்.. ஆக வேண்டிய வேலையைப் பாரு.. நிறைய கேஸ் வருது.. எல்லாம் எடுத்து நடத்து..கட்டி முடிச்ச வீட்டை கிரஹப் பிரவேசம் பண்ணு.. அதுக்கு முன்னாடி பவித்ராவோட வருஷ திதி வருதுன்னு நினைக்கிறன்.. அதை முடி.. உனக்கு நிறைய வேலை இருக்கு கண்ணா.. அப்புறம் .... ...  " என்று சீனியர் நாகலிங்கம் பேசிக் கொண்டே இருக்கும் போது அவரது மனைவி கண்மணி, கண்ணனும் குழந்தைகளும் வந்திருப்பதை அறிந்து பில்டர் காபி போட்டு எடுத்து வந்திருந்தார்.

"வா கண்ணா.. எப்படி இருக்கேப்ப...? ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே.. நீ தனியா ஆபிஸ் போட்டப்புறம் இவருக்கு பர்டன் ஜாஸ்தியாயாய்டிச்சு.. இப்போ ரொம்ப செலக்ட் பண்ணி கேஸ் எடுக்கிறாரு. இப்போ இருக்கிற ஜுனியருங்க உன்னளவு வேகம் இல்லே..! எப்படியோ சமாளிக்கிறோம்.. சரி அதே விடுப்பா.." என்றவாறு ரோஹிணியை வாரியணைத்து செல்லமாக ஒரு முத்தம் கொடுத்தார். அப்படியே சத்தியதேவுக்கும்.

"பவித்ரா போனதுக்கப்புறம் நீ ரொம்ப இளைச்சு போயிட்டே.. உன் முகத்திலே பழைய சந்தோசம் இல்லே.. குழந்தைகளை பாத்தா பாவமா இருக்கு.. உங்கம்மா வேற பாவம்.." என்று கண்ணனை பார்த்து பேசிக் கொண்டே வந்த கண்மணி, அப்படியே தனது பார்வையை தனது கணவர் நாகலிங்கம் பக்கம் திருப்பி, "இவர் கூட பவித்ராவோட வருஷ திதி முடிஞ்ச பிறகு உன்கிட்டே ஒரு மேட்டர் பேசனும்ன்னு சொன்னாரு.. இல்லே செல்லம்..!" என்று அவரது ஆமோதிப்பை எதிர்பார்க்கும் வண்ணம் சொன்னார். அதற்கு அவர் காபி குடித்துக் கொண்டே தலையை  ஆட்டினார்.

"அதென்னக்கா மேட்டர்.. ?" என்று கண்ணன் கேட்டார்.  சீனியரின் மனைவி கண்மணியை கண்ணன் 'அக்கா' என்று அழைப்பது வழக்கம்.

"முதெல்ல, எல்லாம் ஒன் பை ஒன்னா முடிப்போம்.. அதுக்கப்புறம் பேசிக்கலாம்..." என்று கண்மணி கூறினார். பிறகு அவர்களிடம் சொல்லிவிட்டு கண்ணன் தனது குழந்தைகளுடன் விடை பெற்றார். சத்யாவை சீனியர் நாகலிங்கம் தனது தோளில் போட்டுக் கொண்டு வந்து வாசல் வரை வந்தார். அவனும் நன்கு அவரிடம் ஒட்டிக் கொண்டான்.  பின் அவனை கண்ணனிடம் கொடுத்து விட்டு வழியனுப்பி வைத்தார். அதே நேரத்தில் "அதென்னக்கா மேட்டர்.. ?" என்று கண்ணன் கேட்டாரே தவிர பிறகு அதைப் பற்றி அவர் அந்த வாசல் படியிலேயே மறந்து போனார்.

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிவுக்கு வரவுள்ளது. புத்தாண்டும் பிறக்க உள்ளது.  பவித்ரா இறந்து போனதால் கண்ணன் குடும்பத்தினர் எந்தப் பண்டிகையையும்  கொண்டாட வில்லை. எனினும், குழந்தைகள் என்ன செய்தது பாவம்? அவர்களை மகிழ்விக்க புத்தாண்டுக்கு முன்தினம் கண்ணன் அழகாக செய்யப் பட்ட ஒரு புத்தாண்டு கேக் வாங்கி வந்தார். அதை புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வெட்டலாம் என்று ரோஹிணியிடம் சொன்னார்.

அழகான அந்த கேக்கை பார்த்தமாத்திரத்தில் ரோஹினிக்கும், சத்தியதேவுக்கும் பிடித்து போயிற்று. இருவர் முகத்திலும் மகிழ்ச்சி. 'இப்போதே வெட்டிவிடலாம்' என்று சத்தியா குறும்பாக சைகை காட்டினான். அதற்கு, 'உன் மூக்கை அறுத்து விடுவேன்' என்று கேக் வெட்டும் பிளாஸ்டிக் கத்தியை ரோஹினி காட்டினாள். இருவரும் ஒருவரை ஒருவர் பிடிக்கத தொடங்கி பின் கண்ணனை சுற்றி வந்தனர். கண்ணனும் விளையாட்டு காட்டினார். இப்படி கண்ணன், தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு வரலக்ஷ்மியும் மகிழ்ந்தார்.


அப்போது தொலைபேசி மணி ஒலித்தது.. கண்ணன் எடுத்தார்... "அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்.. வக்கீல் சார்.." என்று ஒரு இளம் பெண்ணின் குரல் ஒலித்தது. கண்ணனும் சற்று குழம்பியவாறு, "Same to you.." என்று கூறி விட்டு தொடர்ந்து, "May I know with whom I am talking now?" என்று கேட்டார். ஆனால் இதை நன்கு கேட்டு விட்டு, மறுமுனை பொறுமையாக துண்டிக்கப்பட்டு விட்டது. கண்ணன் இந்தக் குரலை இதற்கு முன் எங்கோ கேட்டதை போல் உணர்ந்தார். ஆனால் ஞாபகம் வரவில்லை. நீதிமன்றத்தில் யாராவது தெரிந்த பெண் வழக்குரைஞராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அப்படி இருந்தாலும், யார் பேசுகிறீர்கள் என்று கேட்ட பிறகும், பதில் சொல்லாமல் ஏன் அப்பெண் தொலைபேசியை வைத்தார் என்ற கேள்வி கண்ணனுக்கு எழுந்தது. பிறகு, 'யாரோ நமக்கு வாழ்த்து சொன்னார்கள்.. நாமும் பதில் வாழ்த்து சொல்லி விட்டோம்.. அவர் யாராக இருந்தால் நமெக்கென்ன?" என்று அதை பற்றி மறந்து விட்டு, புத்தாண்டை குழந்தைகளுடன் வரவேற்கத் தயாரானார் கண்ணன்.

நாமும்தானே !


(தொடரும்..)

22 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கதை.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Advocate P.R.Jayarajan said...

உங்கள் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மறுமொழிக்கும் நன்றி அய்யா..
நானும் புத்தாண்டு வாழ்த்துகளை தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் முன்னதாகவே தெரிவித்துக் கொள்கின்றேன்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...தொடர்கிறேன் ...
வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

கண்ணனையும் குழந்தைகளையும் பார்த்தவுடன் அவர் உற்சாகமானார்.

உற்சாகம் ததும்பும் கண்ணனையும் குழந்தகளும் மனதுக்கு நிறைவளிக்கின்றனர்.. வாழ்த்துகள்..

இராஜராஜேஸ்வரி said...

வாழ்வில் வள்ளல், வறியவர்களுக்கு இலவசமாக சட்ட உதவி, தொழிலில் சிங்கம், மனைவிக்கு தங்கம்,

நிறைவான வாழ்வில் இருப்பவர்களால்
நிறையபேருக்கு வாழ்வில் மகிழ்ச்சி மலரவைக்கமுடியுமே! அசத்தலான குணச்சித்திரம்..

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

புத்தாண்டை குழந்தைகளுடன் வரவேற்கத் தயாரானார் கண்ணன்.

நாமும்தானே !

"அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்.. வக்கீல் சார்.."

இராஜராஜேஸ்வரி said...

படங்கள் கதையைப் பேசவைக்கின்றன.
பொருத்தமான தேர்வு..
ஸ்பெஷல் பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

என்னோட தொழிலுக்காக படைக்கப்பட்டிருக்கேன் என்று எனக்கு கடவுள் உணர்த்தியிருக்கார். அதுக்காக எனக்கு குழந்தைகள் பொறுப்பை ஆண்டவன் தரவில்லை" என்று சிரித்துக் கொண்டே சொல்வார்./

இத்தனை அருமையானவர்களைப் பெற்றோராகப் பெற அத்தனை நிறைவான புண்ணியம் செய்த
ஆத்மா கடவுளுக்குக்கிடைத்திருகாது..

இராஜராஜேஸ்வரி said...

எமது தளத்தினைப் பாராட்டி தலைப்பில் நகரும் எழுத்துகளால் பெருமைபடுத்தியதற்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

Advocate P.R.Jayarajan said...

@ நண்டு @நொரண்டு -ஈரோடு
//தொடருங்கள் ...தொடர்கிறேன் ... வாழ்த்துகள்.//

நன்றி...

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி
//நிறைவான வாழ்வில் இருப்பவர்களால்
நிறையபேருக்கு வாழ்வில் மகிழ்ச்சி மலர வைக்கமுடியுமே!//

யதார்த்தமான வரிகள்.

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி
//புத்தாண்டை குழந்தைகளுடன் வரவேற்கத் தயாரானார் கண்ணன். நாமும்தானே ! "அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்.. வக்கீல் சார்.."//

அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள் மேம்..

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி
//படங்கள் கதையைப் பேசவைக்கின்றன.
பொருத்தமான தேர்வு.. ஸ்பெஷல் பாராட்டுக்கள்..//

கதைக்கு, களமும், காட்சிகளும் அணி சேர்க்கும். ஸ்பெஷல் தேங்க்ஸ்..

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி
//இத்தனை அருமையானவர்களைப் பெற்றோராகப் பெற அத்தனை நிறைவான புண்ணியம் செய்த
ஆத்மா கடவுளுக்குக்கிடைத்திருகாது..//

சரியாகச் சொன்னீர்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை அழகாகவே நகர்ந்து செல்கின்றது, இதன் தலைப்பில் இரண்டாவது வரியில் அழகாக நகர்ந்து செல்லும் சகபதிவர் ஒருவரின் சாதனைகளைப்
பாராட்டி எழுதியுள்ள, அழகான வரிகள் போலவே.

படங்கள் பொருத்தமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கதையைப் படிப்பவர்களுக்கு பலவிதமான உப கதைகள் கற்பனையில் தோன்றுமாறு கொண்டு செல்வது மிக அழகு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி
//எமது தளத்தினைப் பாராட்டி தலைப்பில் நகரும் எழுத்துகளால் பெருமைபடுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..//

Pleasure is mine....

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி

கதையை இரசித்து வாசித்து
கரும்பென மறுமொழிகளை இட்ட
உங்களுக்கு என் மனமார்ந்த
நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உண்மையிலேயே மிகப்பெரிய சாதனையாளரும், மிகச்சிறப்பான ஆன்மிகப்பதிவரும், மிகுந்த ஈடுபாடு மற்றும் ஆர்வத்துடன் கூடிய கடும் உழைப்பை நல்கி, அன்றாடம் ஸத் விஷயங்களைக் கூறிவரும் ஒருவரைத் தாங்கள் தங்களின் தலைப்பு வரிகளில் HIGHLIGHT செய்து, உங்கள் பதிவைப்படிக்க வரும் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு செய்துள்ளதற்கு என் மனமகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன் vgk

Advocate P.R.Jayarajan said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
//கதை அழகாகவே நகர்ந்து செல்கின்றது, இதன் தலைப்பில் இரண்டாவது வரியில் அழகாக நகர்ந்து செல்லும் சகபதிவர் ஒருவரின் சாதனைகளைப்
பாராட்டி எழுதியுள்ள, அழகான வரிகள் போலவே. //

நன்றி அய்யா.
சக பதிவரின் சாதனைகளை பாராட்ட வேண்டிய மகிழ்ச்சியான பொறுப்பு மற்றொரு சக பதிவருக்கு உள்ளது.

Advocate P.R.Jayarajan said...

//கதையைப் படிப்பவர்களுக்கு பலவிதமான உப கதைகள் கற்பனையில் தோன்றுமாறு கொண்டு செல்வது மிக அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். //

இது வெறும் கதை மட்டுமல்ல. வாழ்க்கை உணர்வுகள்... சம்பவங்களின் கோவை... தங்கள் மறுமொழிக்கு நன்றி அய்யா. ..

Advocate P.R.Jayarajan said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
//உண்மையிலேயே மிகப்பெரிய சாதனையாளரும், மிகச்சிறப்பான ஆன்மிகப்பதிவரும், மிகுந்த ஈடுபாடு மற்றும் ஆர்வத்துடன் கூடிய கடும் உழைப்பை நல்கி, அன்றாடம் ஸத் விஷயங்களைக் கூறிவரும் ஒருவரைத் தாங்கள் தங்களின் தலைப்பு வரிகளில் HIGHLIGHT செய்து, உங்கள் பதிவைப்படிக்க வரும் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு செய்துள்ளதற்கு என் மனமகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.//

Pleasure is mine Ayya..

Advocate P.R.Jayarajan said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
//உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்... மறுமொழிகளுக்கு மீண்டும் நன்றி அய்யா..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...