இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Saturday 24 December 2011

மதனப் பெண் 33 - மாமாவின் நல்ல ஆலோசனை

தனது மாப்பிள்ளை என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்து மாமா சுந்தரம் பல்வேறு ஊகங்களுக்கு போனார். ஒருவேளை தான் நினைத்துக் கொண்டிருந்த விசயத்தைதான் மாப்பிள்ளையும் சொல்லப் போகிறாரோ..? என்றும் சுந்தரம் நினைத்தார். எனினும் மாப்பிள்ளை சொல்வதை முதலில் கேட்போம் என்று கருதி தான் சொல்ல வந்த விசயத்தை தள்ளி வைத்து விட்டார்.

"நீங்க ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே.. சொல்லுங்க மாப்பிள்ளே.."

"ஒண்ணுமில்லே மாமா.. நான் உங்ககிட்டே ஏற்கனவே கோடு போட்டு காட்டியதுதான்... இருந்தாலும் அது சரி வருமா என்ற யோசனையும் எனக்கு இருந்தது... ஆனா அதுக்கான ஒரு டிசிசன் எடுக்க வேண்டிய கட்டாயம் இப்போ எனக்கு ஏற்பட்டு இருக்கு.. இது சரியான நேரமும் கூட.. முக்கியமா குழந்தைங்க நல்ல வளரனும்.. எங்க அம்மாவும் நல்ல இருக்கணும்.. எனக்கு தொழில் அது இதுன்னு நேரம் போய்கிட்ருக்கு.. நான் பெர்சனலா குழந்தைங்கலே கவனிக்க முடியுமா என்பது கொஞ்சம் டிபிகல்டியா இருக்கு.. அதுக்காகதான் இந்த முடிவு.. எனக்கு வேற வழி தெரியலை.. " என்று நிறைய பீடிகைகளை போட்டு கண்ணன் பேசிக் கொண்டே போனார்.

"அதெல்லாம் சரி மாப்பிளே.. என்ன முடிவு எடுத்திருக்கீங்கன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே.." என்று சுந்தரம் சற்று அங்கலாய்ப்புடன் கேட்டார்.

"இப்போ ரோஹிணிக்கு சம்மர் வெகேசன். 2 -ஆம் வகுப்பு போகப் போறா. சத்தியா யு.கே.ஜி. போகப் போறான். ரோஹினி நல்ல படிக்கிறா. அவளை கொடைக்கானல்லே இருக்கிற போர்டிங் ஸ்கூல்லே சேர்க்கப் போறேன். அப்ப்ளிகேசன் வாங்கிட்டேன். சத்தியா 1 -ஆம் கிளாஸ் போகிறப்போ அவனையும் அந்த ஸ்கூல்லே சேர்க்க முடிவு செய்திருக்கேன். ரெண்டு குழந்தைகளையும் வைச்சு அம்மாவலே நேரத்துக்கு சமைச்சு போடா முடியலே.. ரெண்டும் ரொம்ப சேஷ்டை செய்யறாங்க.. தவிர  அம்மா, ஏதோ நியாபகத்திலே ஏதேதோ செய்றாங்க.. பதற்றபடறாங்க .. ஹோம் வொர்க் கோச்சிங் தெரியலே.. அதனாலேதான் இந்த முடிவு.  நான் மாசத்துக்கு ஒரு தடவை கொடைக்கானல் போய் ரோஹிணியை பார்த்திட்டு வரப் போறேன். என்ன மாமா.... மதுரையிலிருந்து இதோ இங்கிருக்கிற வத்தலகுண்டு ஒரு மன்நேரம். அங்கிருந்து 2  மணி நேரம்  கொடைக்கானல். போயிட்டு ஒரு நாள் அங்கே தங்கிருந்து ரோஹிணியை பாத்திட்டு அடுத்த நாள் வந்திடப் போறேன்," என்றார் கண்ணன்.


மாப்பிள்ளை கண்ணன் என்ன சொல்லப் போகிறாரோ என்று நினைத்த சுந்தரத்திற்கு இந்த சங்கதி அவரது மனதில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. தான் சொல்ல வந்த விசயத்தைப் பற்றி அவர் வாயைத்   திறக்கவில்லை. மாறாக, "அதான் குழந்தைகளே நாங்க கூட்டிகிட்டு போய் வளத்துரோம்ன்னு முதல்லேயே சொன்னோம்ல்லே மாப்பிளே.. . நீங்க இப்போ ஹாஸ்டல்லே சேக்கணும்ன்னு சொல்றீங்க.. இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகலை... நீங்க குழந்தைங்க ரெண்டு பேரையும் எங்ககிட்டே விட்டுரங்க.. கோவையில் எத்தனையோ நல்ல ஸ்கூல் இருக்கு. அதிலே குழந்தைகளை சேக்கறோம்.. நான் உங்கம்மாவையும் கோவைக்கே கூட்டிட்டிட்டு போறேன். அவ எங்ககூட இருக்கட்டும். நீங்க வந்து பாத்துட்டு போங்க.. நீங்க ரோஹிணியை ஹாஸ்டல்லே சேத்து நல்ல படிக்க வைக்கோணம்ன்னு சொல்றீங்க. வேணும்னா அவளை ஊட்டி  ஸ்கூல்லே சேர்ப்போம்.. சத்தியா கோவை ஸ்கூல்லே படிக்கட்டும்...  எங்ககூட இருக்கட்டும்.." என்று சுந்தரம் உள்ளபடி வீட்டுக்கு மூத்தவராக இருந்து படபடப்பாக தனது தரப்பை சொன்னார். 

இது ஒரு நல்ல ஆலோசனைதானே..? 

ஆனால் கண்ணன் இதற்கு வேறு ஒரு பதில் சொன்னார்.

(பிறகு சொல்கின்றேன்.)

16 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

Advocate P.R.Jayarajan said...

நன்றி..

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றும் நாங்கள் யாரும் ஒரு முடிவுக்கும், யூகத்திற்கும் வரமுடியாதபடி, கதாபாத்திரங்கள் இருவரும் ஏதேதோ சொல்லி சஸ்பென்ஸுடன் (ஒருவித எதிர்பார்ப்புடன்] இந்தக்கதை நிறுத்தப்பட்டுள்ளது. பாராட்டுக்கள், ஐயா.

தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம். vgk

Advocate P.R.Jayarajan said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
//இன்றும் நாங்கள் யாரும் ஒரு முடிவுக்கும், யூகத்திற்கும் வரமுடியாதபடி, கதாபாத்திரங்கள் இருவரும் ஏதேதோ சொல்லி சஸ்பென்ஸுடன் (ஒருவித எதிர்பார்ப்புடன்] இந்தக்கதை நிறுத்தப்பட்டுள்ளது. பாராட்டுக்கள், ஐயா. தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.//

சில முடிவுகளை எடுக்கு முன் கதாபத்திரங்கள் பேசி நியாப்படுத்த வேண்டியுள்ளது.. நிறைய சஸ்பென்ஸ் இந்த கதையில் உள்ளன. உடன் மறுமொழிக்கு நன்றி வை.கோகி அய்யா..

இராஜராஜேஸ்வரி said...

இது ஒரு நல்ல ஆலோசனைதானே..?

ஆனால் கண்ணன் இதற்கு வேறு ஒரு பதில் சொன்னார்./

சரிவரும்போலத்தான் இருக்கிறது.. கண்ணன் சொன்ன வேறுபதில் என்ன்வாக இருக்குமோ!??

இராஜராஜேஸ்வரி said...

ஒருவேளை தான் நினைத்துக் கொண்டிருந்த விசயத்தைதான் மாப்பிள்ளையும் சொல்லப் போகிறாரோ..? என்றும் சுந்தரம் நினைத்தார். எனினும் மாப்பிள்ளை சொல்வதை முதலில் கேட்போம் என்று கருதி தான் சொல்ல வந்த விசயத்தை தள்ளி வைத்து விட்டார்./

அனுபவம் மிக்கவர் அல்லவா?
முதலில் வயதில் சிறியவர் கருத்தை அறிவதுதானே முறை!

இராஜராஜேஸ்வரி said...

அம்மாவலே நேரத்துக்கு சமைச்சு போடா முடியலே.. ரெண்டும் ரொம்ப சேஷ்டை செய்யறாங்க.. தவிர அம்மா, ஏதோ நியாபகத்திலே ஏதேதோ செய்றாங்க.. பதற்றபடறாங்க .. ஹோம் வொர்க் கோச்சிங் தெரியலே.. அதனாலேதான் இந்த முடிவு./

அவர் கோணத்தில் அருமையாகத்தான் யோசித்து முடிவெடுத்திருக்கிறார் போலிருக்கிறது..

இராஜராஜேஸ்வரி said...

சுந்தரம் உள்ளபடி வீட்டுக்கு மூத்தவராக இருந்து படபடப்பாக தனது தரப்பை சொன்னார்.

இது ஒரு நல்ல ஆலோசனைதானே..?



எந்த யோசனை செயல்படுத்தப்படுமோ!

இராஜராஜேஸ்வரி said...

படங்கள் சிறப்பாக கதையின் திருப்புமுனையை சிம்பாலிக்காக காட்டுகின்றன..

பாராட்டுக்கள்..

Advocate P.R.Jayarajan said...

முதலில் மின்னல் வேக மறுமொழிகளுக்கு என் நன்றி..

Advocate P.R.Jayarajan said...

//இது ஒரு நல்ல ஆலோசனைதானே..?
எந்த யோசனை செயல்படுத்தப்படுமோ!//

கண்ணன் சொல்லபோவதில் எல்லாம் அடங்கியுள்ளது..

Advocate P.R.Jayarajan said...

//அவர் கோணத்தில் அருமையாகத்தான் யோசித்து முடிவெடுத்திருக்கிறார் போலிருக்கிறது..//

அவருக்கு யாரையும் சார்ந்திருக்க பிடிக்கவில்லை. உண்மை...

Advocate P.R.Jayarajan said...

//அனுபவம் மிக்கவர் அல்லவா?
முதலில் வயதில் சிறியவர் கருத்தை அறிவதுதானே முறை!//

தாய் மாமா அல்லவா ?

Advocate P.R.Jayarajan said...

//சரிவரும்போலத்தான் இருக்கிறது.. கண்ணன் சொன்ன வேறுபதில் என்ன்வாக இருக்குமோ!??//

இது சரி வந்திருக்க வேண்டும் ஒன்று..

Advocate P.R.Jayarajan said...

//படங்கள் சிறப்பாக கதையின் திருப்புமுனையை சிம்பாலிக்காக காட்டுகின்றன.. பாராட்டுக்கள்..//

பயணம் திசை மாறுகிறது..

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி

மின்னலாக வந்து மின்னிய மறுமொழிகளுக்கு
மீண்டும் நன்றி..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...