இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Saturday, 8 October 2011

மதனப் பெண் 2 - களம்

நம் நாயகியின் பெயர் லலிதா. ரோஜாப்பூ நிறம், நல்ல உயரம், சற்றே பூசினாற் போன்ற உடல்வாகு, பட்டப் படிப்பு, பார்க்க அப்சரஸ் போல் தெரிவார்.


'அடேடே பெரிய அழகி போல' என்று நினைத்து விடாதீர்கள். இந்த இலட்சணங்கள் ஏதும் அவளிடம் இல்லை.

சுமார் நிறம், பஞ்சத்தில் அடிபட்டது போன்ற சமதள  உடல், சராசரி உயரத்தில் சேர்த்துக் கொள்ள முடியாத உயரம், பெரிய நாசிகள், அத்துடன் பெரிய விழிகள். இத்துப் போன ஆடைகள். பட்டப் படிப்பு பாதியில் அம்பேல். எதையோ ஒன்றை நினைத்து கொண்டிருக்கும் முகம். தன்னை ஒரு அப்பாவியாகவும், அமைதியானவளாகவும்  காட்டிக் கொள்ள நினைக்கும் பாவனை. பேச்சில், செயலில் ஏதோ ஒரு நாடகத் தனம்.

இவரது பூர்வீகம் மதுரை. இவரது முன்னோர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே சென்னைக்கு வந்து வாசம் செய்யத் தொடங்கிவிட்டதாக சொல்லப்பட்டது. 

பெற்றோர், இரண்டு சகோதரர்கள் என்று மொத்தம் பஞ்சவர்களாக சென்னையில் ஏதோ ஒரு பேட்டையில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வாடகை வாசம். ஒரு ஹால், ஒரு கிட்சன், பக்கத்திலேயே பாத்ரூம். சுமார் 250 சதுரடி இருக்கும். வந்தவர்களை வரவேற்று அமரச் செய்யக் கூட ஒரு நாற்காலி இல்லை.  வறுமையும், வெறுமையும் அந்த வீட்டின் இலக்கணமாக இருந்தன. 

தந்தை அப்போது தமிழக அரசுத்துறையில் குமாஸ்தாவாக சொற்ப சம்பளத்தில் பணியாற்றி வந்தார். ஒய்வு பெறும் வயதில் மிதி வண்டியில் அலுவலகப் பயணம். தாயின் கழுத்தில் வெறும் மஞ்சக் கயிறு. பார்க்க வேலைக்காரி போல் இருந்தார். இரண்டு சகோதரர்களும் முறையே கல்லூரி மற்றும் பள்ளி இறுதியில் இருந்தனர். ஏதேனும் ஒரு வகையில் 'விடிவு காலம் வராதா?' என்ற ஏக்கம் எல்லோரது முகத்திலும் அப்படியே ஒட்டிக் கொண்டிருந்தது. 

இப்படிப்பட்ட பின்னணியில் லலிதாவிற்கு பெற்றோர் வரன் பார்த்துக் கொண்டிருந்தனர். 

ஆனால் லலிதாவிற்கு ஏற்கனவே ஒரு பயங்கரமான பின்னணி உள்ளது என்பது நமது நாயகன் கண்ணனுக்கு தெரியாது ...

நாளை தொடர்கிறேன்.. 

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஆனால் லலிதாவிற்கு ஏற்கனவே ஒரு பயங்கரமான பின்னணி உள்ளது என்பது நமது நாயகன் கண்ணனுக்கு தெரியாது .../

எதிர்பார்ப்புடன் நிறுத்திய கதை! பாராட்டுக்கள்.

Advocate P.R.Jayarajan said...

பின்னூட்டம் இட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்தமைக்கு நன்றி ..

Advocate P.R.Jayarajan said...

அது போல் முதல் ஆதரவாளராக சேர்ந்தமைக்கும் நன்றி...

aalunga said...

இன்று தான் உங்கள் கதையை முழுமையாய் படிக்க வாய்ப்பு கிடைத்தது..
ஆரம்பமே அதகளமாக இருக்கே

Advocate P.R.Jayarajan said...

போகப் போக அமிளிதுமிளியாக இருக்கும்...

vetha (kovaikkavi) said...

அது என்னது பயங்கரப் பின்னணி?.....தேடி ....வாசிப்பேன். வாழ்த்துகள்...
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordoress.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...