இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Wednesday 26 October 2011

மதனப் பெண் 14 - எதிலும் ஒரு பக்குவம்

பவித்ரா எப்படி உருவத்தில், அழகில் ஒரு நேர்த்தியோ, அப்படியே எல்லா விதத்திலும். 

வாய்க்கு ருசியாக சமைப்பதில் ஒரு நேர்த்தி. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் ஒரு நேர்த்தி. கண்ணன் கொடுக்கும் பணத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்துவதில் நேர்த்தி. கண்ணனுக்கு எந்த சமயத்தில், எப்படி உடுத்தினால், எப்படி அலங்கரித்துக் கொண்டால் பிடிக்குமோ அவ்வாறு செய்து கொள்வதில் நேர்த்தி. எதிலும் ஒரு பக்குவம். சீராக இருக்க வேண்டும், எல்லாம் அழகாக, ரசிக்கும்படியாக  இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் கொண்டவள். திட்டமிடுவதில் வல்லமை அவளிடம் நிறைய இருந்தது.

அப்படித்தான் இப்போதும் ஒரு திட்டமிட்டு, தனது முடிவை கண்ணனிடம் சொன்னாள்.

"மாமா, நீங்க தொழிலே நல்ல முன்னுக்கு வந்துகிட்டு இருக்கீங்க.. முந்தி  மாதிரி இப்போ உங்களுக்கு நேரம் கிடைக்கிறதில்லை. நமக்கு ரோஹினி பிறந்து இப்போ கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆகப் போவுது. இதோ... நீங்க எதிர்பார்த்த மாதிரி உங்களுக்கு மணியா ஒரு ஆண் வாரிசையும் பெத்துக்  கொடுத்திட்டேன். ஆசைக்கு ஒன்னு, ஆஸ்திக்கு ஒன்னு... கணக்கு சரியாப் போச்சு. பெத்த குழந்தைகளை நல்ல ஜம்முன்னு வளக்கணும். அதனாலே..." என்று சிறிது இழுத்து இடைவெளி விட்டாள் பவித்ரா.

"அதனாலே என்ன பவித்ரா..?" என்று சற்று நெற்றியை சுருக்கியவாறு கண்ணன் வினவினார். 

பவித்ரா தலையை சற்று குனிந்தவாறு, "இல்லே மாமா.. நமக்கு இந்த ரெண்டு குழந்தைகள் போதும்.. நான் கருத்தடை ஆபரேசன் செய்துகிலாம்ன்னு நினைக்கிறேன்.." என்றாள்.

கண்ணனுக்கு இது ஆட்சேபத்திற்குரிய விசயமாக படவில்லை. "பவி.. நீ சொல்றது சரிதான். மூணு வருசத்திலே ரெண்டு குழந்தைகள் ஆயிடிச்சு. இவங்களை நல்ல வளத்தா  அதுவே போதும். நானும் இப்போ இருக்கிற வீட்டை கொஞ்சம் இடிச்சு பெருசா கட்டணும்ன்னு நினைக்கிறேன். அதனாலே பேமலி பிளானிங் செய்துகிறது நல்லதுதான்." என்று பவித்ராவின் முடிவை ஆமோதிக்கும் வண்ணம் கண்ணன் சொன்னார். 

எனினும் பவித்ரா, "நீங்க சரின்னு சொல்லிடீங்க.. எதுக்கும் அத்தே கிட்டே ஒரு வார்த்தை கேட்டுரது நல்லது.. அவங்க கிட்டே கேட்கமே நாமளே முடிவு பண்றது எனக்கு அவ்வளவு சரியப்படலை" என்றாள். 

தனது தாயின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று பவித்ரா கூறியது கண்ணனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தனது தாய் தங்கள் விருப்பத்திற்கு எப்போதும் குறுக்கே நின்றதில்லை என்பதால், "வெரி குட்.. அப்படியே செய்யலாம்" என்றார் கண்ணன். 

பவித்ராவை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக கண்ணனின் தாயார் வரலக்ஷ்மி வந்திருந்த போது இந்த விஷயத்தை அவரிடம் இருவரும் மெல்ல கூறினார். 

அவர் ஏற்றுக் கொண்டு விடுவார் என்று கண்ணன்-பவித்ராவும் நம்பினார்.

வரலக்ஷ்மி இவர்கள் இருவரின் முடிவை ஏற்றுக் கொண்டாரா?

(தொடரும்) 

4 comments:

Rathnavel Natarajan said...

நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

தனது தாயின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று பவித்ரா கூறியது கண்ணனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தனது தாய் தங்கள் விருப்பத்திற்கு எப்போதும் குறுக்கே நின்றதில்லை என்பதால், "வெரி குட்.. அப்படியே செய்யலாம்" என்றார் கண்ணன். /

அருமையான பெண்..

சிறப்பான கதைக்குப் பாராட்டுக்கள்..

Advocate P.R.Jayarajan said...

பின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி ..

Advocate P.R.Jayarajan said...

@ Rathnavel

//நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.//

நன்றி அய்யா ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...