அப்புசாமி ஒரு 100% பொண்டாட்டிதாசன்.
மனைவி சுந்தரியின் தீர்மானமே அப்புசாமியின் தீர்மானம். "என்னங்க... இதுதான் என்னோட முடிவு..." என்று சுந்தரி சொல்லிவிட்டால் அதற்கு அப்பீல் இல்லை. அது அப்புசாமியின் இறுதி முடிவாக சபையில் பகிரங்கமாகும். அவரைச் சொல்லி குற்றமில்லை. அப்படி அவர் வாழ்ந்து பழகி விட்டார். இல்லையென்றால் அப்படி அவரை வாழப் பழக்கி விட்டுவிட்டார் சுந்தரி, என்றும் சொல்லலாம்.
அப்படி சுந்தரி எடுத்த தீர்மானத்தை தனது தீர்மானமாக கொண்டு அப்புசாமி வக்கீல் மாப்பிள்ளைக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதமும் மகள் லலிதாவின் 'டிக்டேசன்'தான் .
ஜாதகத்துடன் கூடிய தனது கடிதத்தின் முடிவில் 'பிற விவரங்களை தங்கள் பதில் பார்த்து நேரில் தெரிவிக்கிறோம்" என்று முத்தாய்ப்பாக அப்புசாமி எழுதியிருந்தார்.
அதே நேரத்தில் இந்த சம்பந்தம் செட்டனால் பரவாயில்லை என்றும், செட்டாகாமல் போனாலும் பரவாயில்லை என ஒன்றுக்கொன்று முரண்பாடான இரு வேறு கருத்துகளை லலிதா மனதில் கொண்டிருந்தாள்.
இரண்டு தினங்கள் கழித்து அதாவது ஒரு சனிக்கிழமையன்று நண்பகல் வேளையில் மதுரை, கீழவெளி வீதியில் உள்ள ஒரு வக்கீலின் வீட்டுகதவை தபால்காரர் தட்டினார். நெற்றியில் வீபூதியும், குங்குமம் இட்டு வீடுடன் இணைந்த அலுவலக அறையில் அமர்ந்திருந்த கண்ணன் கதவைத் திறந்து தபால்காரரிடமிருந்து தபால்களை பெற்றுக் கொண்டார்.
அதில் ஒன்று அப்புசாமி சென்னையிலிருந்து எழுதிய கடிதம்.
"அப்புசாமியா? யாருன்னு தெரியலையே ! நமக்கு அப்படி ஒரு கிளைன்ட் சென்னையில் இல்லையே?" என்ற யோசனையுடன் கண்ணன் அக்கடிதத்தைப் பிரித்தார். நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிய ஜாதகம் கண்டவுடன் கண்ணன் விவரம் புரிந்து கொண்டு அப்புசாமியின் கடிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.
அப்போது, "டாடி.. பாருங்க டாடி ... தம்பி என் பொம்மையை உடைச்சிட்டான்.." என்று வக்கீல் கண்ணனின் செல்ல மகள் ரோஹினி கண்ணை கசக்கியவாறு அவரது அருகில் வந்து நின்றாள்.
"அப்புசாமியின் கடிதத்தை சரியாகத் தொடக் கூடவில்லை... அதற்குள் பொம்மை உடைந்து விட்டதாக தனது 7 வயது மகள் சொல்கிறாளே.." என்று கண்ணனின் மனதில் ஒரு சிறு மின்னல் கீற்று கருக்கென எட்டிப்பார்த்தது. எனினும் பிள்ளைகள் என்றால் இதெல்லாம் சகஜம்.. இதையெல்லாம் சகுனத்துடன் ஒப்பிடக்கூடாது என்று கண்ணன் தனக்குதானே சமாதானம் செய்து கொண்டு, மகள் ரோஹிணியை வாரியணைத்தவாறு அப்புசாமியின் கடிதத்தை மேலே படிக்க ஆரம்பித்தார். விவரங்களை அறிந்து கொண்டார்.
கண்ணன் என்ன முடிவு செய்தார்?
(பின் சொல்கிறேன்...)
4 comments:
அப்புசாமியின் கடிதத்தை சரியாகத் தொடக் கூடவில்லை... அதற்குள் பொம்மை உடைந்து விட்டதாக தனது 7 வயது மகள் சொல்கிறாளே.." என்று கண்ணனின் மனதில் ஒரு சிறு மின்னல் கீற்று கருக்கென எட்டிப்பார்த்தது
முடிவு என்ன???
சொல்கிறேன்...
atuththu... aarvam athikammaa ullathu...vaalththukkal
//atuththu... aarvam athikammaa ullathu...vaalththukkal//
Nanri..
Post a Comment