கண்ணன் கொடைக்கானலில் இருந்து திரும்பி வந்து தனது வழக்கமான பணிகளில் மனதை செலுத்திக் கொண்டிருந்தார். தனது இரு குழந்தைகளை தவிர வேறு எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாத ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையை அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். இப்படி சுமார் 1 மாதம் சென்று விட்டது.
இந்நிலையில் கண்ணனுக்கு அவரது சீனியர் வழக்குரைஞர் நாகலிங்கம் ஒரு நாள் தொலைபேசியில் அழைத்தார்.
"ஹலொவ் கண்ணன் .... நான் பேசுறேன்... டைம் இருந்த வொர்க் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டு போயேன். ஐ வான்ட் டு ஹவ் எ டிஸ்கசன் வித் யு ...!" என்று சுருக்கமாக பேசினார்.
தனது சீனியர் ஏதாவது ஒரு முக்கிய வழக்கு குறித்து கலந்துரையாட அழைக்கின்றார் என்று கருதி, "எஸ் சார் ... இட் இஸ் மை பிளசர் ... நாளைக்கு சண்டே ... நிச்சயம் வர்றேன் சார்" என்று கண்ணன் தனது வருகையை பவ்யமாக உறுதிப்படுத்தினார்.
சீனியரின் வீட்டுக்கு ஞாயிற்று கிழமை காலை சுமார் 11 மணி அளவில் கண்ணன் சென்றார். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், "இப்படி கூட நமது வாழ்வில் சில சமயம் நடந்து விடும்.. எல்லாம் சரி பண்ணிக்கலாம்... " என்று தனது கட்சிக்காரகளுக்கு முதலில் பயத்தை தெளிவித்து நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டுபவர் மூத்த வழக்குரைஞர் நாகலிங்கம். அன்றும் அதே உற்சாகத்துடன் அவர் கண்ணனை வரவேற்றார்.
"வா கண்ணா... அம்மா, குழந்தைகளெல்லாம் நல்லா இருக்காங்களா...? பவித்ராவோட திதிக்கு வந்தப்போ குழந்தைகளை பாத்தேன். ரோஹிணி நல்ல படிக்கிறாளா..? நீதான் எப்பவும் டல்லா இருக்கே.. கமான் சியர் அப் யங் மேன் .." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, "வா... கண்ணா .. எப்படி இருக்கே?" என்றவாறு சீனியரின் மனைவி கண்மணி கையில் காஃபி கோப்பைகளுடன் வந்தார்.
சீனியரும் அவரது மனைவி கண்மணியும் சிறிது நேரம் கண்ணனிடம் சில பொதுவான விசயங்களை பேசிக் கொண்டிருந்தனர். பிறகு கண்ணனை அழைத்த காரணம் தொட்டு சீனியர் பேச ஆரம்பித்தார்.
"கண்ணா... ஒரு முக்கியமான டிஸ்கசனுக்கு உன்னை நான் கூப்பிட்டேன். ஆனா இப்போ உன்னோட டிஸ்கசன் பண்ணப் போறது யாரு தெரியுமா...? என் டியர்தான்...!" என்று கண்மணியை ஓரக்கண்ணால் பார்த்தார். தொடர்ந்து, "என்ன டியர் ... நான் சொல்றது சரிதானே ?" என்று கண்மணியிடமும் கேட்டார் நாகலிங்கம். அதற்கு கண்மணி, "இதெல்லாம் நான்தானே பேசியாகணும்.." என்று உதட்டோர புன்னைகையுடன் பதிலளித்தார்.
இருவரும் ஏதோ புதிராக பேசுகிறார்களே என்று கண்ணன் நினைத்துக் கொண்டிருந்த வெளியில், சீனியரின் மனைவி கண்மணி, "அது ஒண்ணுமில்லே கண்ணா.... நம்ம ரீலேசன் ஒருத்தர் இங்கே சிம்மக்கல் பக்கத்திலே இருக்கார். பேன்சி ஸ்டோர் வச்சிருக்கார். வியாபாரம் பரவாயில்லை. நல்ல குடும்பம். எதென்னாலும் உங்க சீனியர் பேச்சை தட்டமாட்டங்க.." என்று சற்று நிறுத்தி தனது கணவர் நாகலிங்கத்தை அதே ஓரக்கண்ணால் பார்த்தார்.
இதையடுத்து உரையாடலின் தொடர்ச்சியை நாகலிங்கம் எடுத்துக்கொண்டு சற்று தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். "கண்ணா... நீ இன்னும் பவித்ராவோட வாழ்ந்துகிட்டிருகிறே என்கிறது எங்களுக்கு நல்லவே தெரியும்... பவித்ராவை உன்னாலே மறக்க முடியாது என்கிறதிலே எங்களுக்கு மாற்றுக் கருத்து துளிக்கூட இல்லே.... மறக்கவும் கூடாது.... அதுதான் நியாயம். ஆனா உன் குழந்தைகளை நினைச்சு பாரு.. அதுகளுக்கு இப்பவே பவித்ராவோட இடத்திலே இன்னொரு பொண்ணே அறிமுகப் செஞ்சு வெச்சிட்டா அவங்க காலப்போக்கிலே அவளை தங்களோட பெத்த தாயா பாக்க ஆரம்பிச்சுடுவாங்க... கொஞ்சம் வளந்து பெருசான இதுக்கு சாத்தியம் குறைஞ்சு போய்டும்... அன்னியோன்யம் வராது... காலம் ரொம்ப சீக்கிரமா போய்டும். உனக்கும் ஒரு துணை வேணும் என்கிறது எங்களோட அபிப்பிராயம். கொஞ்சம் திங்க் பண்ணிப் பாரு..." என்று மேல்முறையீட்டு வழக்கு ஒன்றில் வாதிடுவது போல் கண்ணனிடம் பேசினார்.
இதையடுத்து சீனியரின் மனைவி கண்மணி பேசுகையில், "அந்த சிம்மக்கல் ரீலேசனுக்கு மூணு பொண்ணுங்க.... ரெண்டு பசங்க... மூத்த பொண்ணு பி.எ. டிஸ்கன்டினியு. இருந்தாலும் நல்ல குடும்பபாங்கா பவித்ரா மாதிரியே இருப்பா... வசதி கம்மியின்னாலும் நல்ல குணம்.. பொறுமைசாலி... அவளுக்கு வரன் எதுவும் செட்டாகலே. தட்டிக் கழிச்சு போய்க்கிட்டுருக்கு. ஆனா உனக்கும் அவளுக்கும் பொருத்தம் நல்ல இருக்கு. உனக்கு செவ்வா தோஷம், அவளுக்கும் செவ்வா தோஷம்.. ஒத்துப்போகுது. பொறுப்பு தெரிஞ்ச பெரிய குடும்பம் என்கிறதாலே உன் குழந்தைகளை நல்ல பாத்துப்பா. உங்க சீனியர் பேசினா ரெண்டாம் தாரத்துக்கு நிச்சயம் ஒத்துப்பாங்க." என்றார் சற்று பெரு மூச்சுடன்.. சொல்ல வேண்டும் என்று நினைத்ததை சொல்லி விட்ட ஒரு திருப்தி அவரது முகத்தில் தெரிந்தது.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு, தான் வழக்குப் பிரச்சனைகாக பேச அழைக்கப்படவில்லை என்பதும், தனது வாழ்க்கைப் பிரச்சனைக்காக பேச அழைக்கப்பட்டிருக்கின்றேன் என்பதும் புரிந்தது.
கண்ணன் இதற்கு என்ன பதில் சொன்னார்....?
அவர் இந்தப் பிரச்சனைக்கு ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவுதான் என்ன..?
(தொடர்கின்றேன்)

11 comments:
"இப்படி கூட நமது வாழ்வில் சில சமயம் நடந்து விடும்.. எல்லாம் சரி பண்ணிக்கலாம்... " என்று தனது கட்சிக்காரகளுக்கு முதலில் பயத்தை தெளிவித்து நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டுபவர் ..
கண்ணனது வாழ்க்கைக்கும் நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டியிருக்கிறார் ..பாராட்டுக்கல்...
வழக்குப் பிரச்சனைகாக பேச அழைக்கப்படவில்லை என்பதும், தனது வாழ்க்கைப் பிரச்சனைக்காக பேச அழைக்கப்பட்டிருக்கின்றேன் என்பதும் புரிந்தது. /
வாழ்க்கைப்பிரச்சினை சுமுகமாக ஆகட்டும் ....
'சித்தி கொடுமை' அறிந்தவரா...? சமாளித்து விடலாம் என்றா..?
...ம்... செவ்வா தோஷம் எல்லாம் நம்புபவரா...? அப்போ யோசிக்க வேண்டும்...
நல்லா சுவாரஸ்யமாக போய்க்கொண்டு இருக்கு...
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்கிறேன்
தொடர வாழ்த்துகள்...
படங்கள் பதிவுக்கு பொலிவூட்டுகின்றன ...
@ இராஜராஜேஸ்வரி said...
//கண்ணனது வாழ்க்கைக்கும் நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டியிருக்கிறார் ..பாராட்டுக்கல்...//
உண்மைதான்
@இராஜராஜேஸ்வரி said...
//வாழ்க்கைப்பிரச்சினை சுமுகமாக ஆகட்டும் ....//
வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா...
@ திண்டுக்கல் தனபாலன் said...
//'சித்தி கொடுமை' அறிந்தவரா...? சமாளித்து விடலாம் என்றா..? ...ம்... செவ்வா தோஷம் எல்லாம் நம்புபவரா...? அப்போ யோசிக்க வேண்டும்...//
கண்ணனின் யோசனை வேறு மாதிரி இருந்தது.
வருகைக்கு நன்றி...
@ சேக்கனா M. நிஜாம் said...
//நல்லா சுவாரஸ்யமாக போய்க்கொண்டு இருக்கு...
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்கிறேன் தொடர வாழ்த்துகள்...//
தருகின்றேன் நிஜாம் சார்... நன்றி...
@இராஜராஜேஸ்வரி said...
//படங்கள் பதிவுக்கு பொலிவூட்டுகின்றன ...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா...
நிஜமான நேர்மையான தொடரை தொடருங்கள்
Post a Comment